ஹரீனுக்கு எதிரான மனுவை ஏற்க மறுத்த இந்திய உயர்ஸ்தானிகரகம்
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை, இந்தியாவின் ஒர் மாநிலம் என ஹரீன் வெளியிட்ட கருத்து அரசியல் அமைப்பிற்கு முரணானது எனவும் அது நாட்டு மக்களின் நிலைப்பாடு அல்ல எனவும் கூறி இந்த மனு தயாரிக்கப்பட்டிருந்தது.
அரசியல் அமைப்பிற்கு முரணானது
இந்த மனு கையூட்டல், ஊழல் மற்றும் விரயங்களுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்டது.
எனினும் இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
எட்கா உடன்படிக்கை
இந்தியாவின் தேவைக்கு உள்நாட்டு வளங்களும், பொருளாதார மற்றும் பாதுகாப்பு கேந்திர நிலையங்கள் விற்பனை செய்வதனை எதிர்ப்பதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையை எதிர்க்கும் நோக்கிலும் இந்த மனு தயாரிக்கப்பட்டது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
மனுவை கையளிக்கச் சென்ற போது இந்திய உயர்ஸ்தானிகராலய பகுதியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.