எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் 15 இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (15.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்தியா - நாகபட்டினத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை குறித்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீரியல்வள திணைக்களம், கடற்றொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் அனைவரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri