அமெரிக்காவில் இந்திய குடும்பம் துப்பாக்கிமுனையில் கடத்தல்! தீவிரமடையும் விசாரணை
அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 4 பேர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சென்ட்ரல் வெலி பகுதியில் இந்திய குடும்பம் வசித்து வரும் நிலையில், துப்பாக்கிமுனையில் நேற்று சிலர் கடத்திச்சென்றுள்ளனர்.
மர்ம நபரால் கடத்தல்
மெர்சிட் கவுண்டியில் (Merced County) வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரது மனைவி ஜஸ்லின் கவுர் உள்பட 4 பேர் துப்பாக்கி முனையில் நெடுஞ்சாலையில் வைத்து மர்மநபரால் கடத்தப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த இந்திய குடும்பத்தினரை கடத்தி சென்றது யார்? எத்தனை பேர் கடத்தி சென்றனர்? கடத்தலுக்கான காரணம் என்ன? என்ற பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் கடத்தப்பட்டவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
