மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. இந்தியாவின் அதிரடி அறிவிப்பு
ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.
அந்நாட்டில் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் மூலம் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் - மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், வணிக விமானங்கள் உட்பட அனைவரும் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது.
எந்நேரமும் தாக்கலாம்..
ஈரானில் தற்போது நிலவும் மேசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, அமெரிக்கா, ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடன் வெளியேறுமாறு எச்சரித்தது.
இதன் காரணமாக, அமெரிக்கா, ஈரானை எந்நேரமும் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்தது.
இந்நிலையில், இந்தியாவும் அந்நாட்டிலிருந்து இந்தியர்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளமை மத்திய கிழக்கில் ஏற்படும் பதற்றநிலையின் தீவிரத்தன்மையை காட்டுகின்றது.