பா.ஜ.க அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது: யாழ். கடற்றொழிலாளர்கள் சாடல்
இந்திய பா.ஜ.க கட்சியின் தமிழ்நாட்டு மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு (Kuppusami Annamalai) தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டதாலேயே கச்சத்தீவு தொடர்பில் பிதட்ட ஆரம்பித்துவிட்டார் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் (Sellathurai Natkunam) தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இன்று (01.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கச்சத்தீவு எமது சொத்து இந்தியா இலங்கைக்கு தாரை பார்த்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய அரசாங்கம்
அண்ணாமலைக்கு தற்போது தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்த நிலையில் தமிழக கடற்றொழிலாளர்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் கபடத்துடன் தான் பேசுவது என்ன என தெரியாமல் புலம்ப ஆரம்பித்துள்ளார்.
1974இற்கு முன்னர் இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் கன்னியாகுமரி நாகப்பட்டினம் ஆகிய பிரதேசங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் காரணமாக அப்போதைய இந்திய அரசாங்கம் இலங்கை கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக ஒப்பந்தம் என்ற போர்வையில் எம்மை கட்டுப்படுத்துவதற்காக வலிந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
கச்சத்தீவு எல்லை
ஆனால், அண்ணாமலை காங்கிரஸ் அரசாங்கம் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து விட்டதாக கூறி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் பிரான்ஸ்சிஸ் ரட்ணகுமார் (Francis Ratnakumar), ”பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வர முன் பொலிஸ் அதிகாரியாக சொயற்பட்டவர் என ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை திருடன் பொலிஸ் விளையாட்டு என அண்ணாமலை நினைக்கக் கூடாது இது எமது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை.
ஆகவே, கச்சத்தீவு எமது சொத்து. யாரும் உரிமை கோர முடியாத நிலையில் அண்ணாமலை தேவையற்ற பொய்களை பரப்ப முனைந்தால் கச்சத்தீவு எல்லையில் அண்ணாமலை கொடும்பாவியை கொழுத்தத் தயங்கோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |