மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறிய இந்திய கிரிக்கட் அணி
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் கிரிக்கட்டின் இறுதிப்போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் மீண்டும் இந்தியா (India ) முதலிடம் பெற்றுள்ளது
ஏற்கனவே சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்தன் மூலம், இந்தியா புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு
இந்தநிலையில் கடந்த நான்கு நாட்களாக பேர்த்தில் நடைபெற்ற போர்டர்- கவாஸ்கர் கிண்ண முதல் டெஸ்டில் இந்தியா 295 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல்நிலை பெற்றுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலிய அணியுடனான எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில், மூன்றில் வெற்றி பெற்றால், இந்திய அணி, 2025 சர்வதேச கிரிக்கட் சம்மேளன டெஸ்ட் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.
அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போர்டர்- கவாஸ்கர் கிண்ண முதல் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கட்டுக்களின் இழப்புக்கு 487 ஓட்டங்களையும் பெற்றது.
அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 104 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 238 ஓட்டங்களையும் பெற்றது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
