இராஜதந்திர முறுகலுக்கு மத்தியில் இந்திய - கனேடிய பிரதமர்கள் சந்திப்பு
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முறுகல்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் (Justin Trudeau) இத்தாலியில் (Italy) வைத்து சந்தித்துள்ளனர்.
அபுலியாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு சென்ற, இருவரும் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல்
காலிஸ்தானிய தீவிரவாத பிரச்சினைகளால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த பின்னர், இரண்டு நாட்டு பிரதமர்களும் சந்தித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில், முக்கியமான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அர்ப்பணிப்பாக இந்த சந்திப்பு அமைந்ததாக கனேடிய பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனடாவில் இடம்பெற்ற காலிஸ்தானிய தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் புலனாய்வுப்பிரிவின் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ தெரிவித்ததை அடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்து வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
