சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் விடுவிப்பு
பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக, இந்திய எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
இந்திய எல்லை பாதுகாப்புப் படையில், கொன்ஸ்டபிளாக பணிபுரியும் பூர்ணம் குமார் ஷா. பஞ்சாபின் பெரோஸ்பூரில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்னர்,ஏப்ரல் 23 ஆம் திகதியன்று, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய போது, அவரை பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.
விடுவிப்பு
தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலோக் தோனா பகுதிக்குச் சென்ற போதே, பாகிஸ்தான் இராணுவத்தால், அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தமும் நடைமுறைக்கு வந்துள்ளதை அடுத்து, இன்று முற்பகல் 10.30 மணிக்கு அட்டாரி-வாகா எல்லை வழியாக, அவரை அழைத்து வந்து பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |