நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வில் இந்திய துணைத்துாதுவர் பங்கேற்பு(Photo)

Kilinochchi Tamil nadu Sri Lanka Sri Lankan Peoples India
By Sudaron Jun 06, 2022 11:35 AM GMT
Report

கிளிநொச்சிக்கு இன்று (06) விஜயம் செய்த இந்திய துணைத்துாதுவர் இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரண பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று(6) இந்த நிகழ்வில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவு பொதிகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரசு திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் உதவி

நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வில் இந்திய துணைத்துாதுவர் பங்கேற்பு(Photo) | Indian Auxiliary Attends Relief

நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வில் இந்திய துணைத்துாதுவர் பங்கேற்பு(Photo) | Indian Auxiliary Attends Relief

பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அண்மையில் தமிழக அரசு அத்தியாவசிய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

அந்த வகையில் இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரண பொதிகள் கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

உதவி பொருட்கள்

நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வில் இந்திய துணைத்துாதுவர் பங்கேற்பு(Photo) | Indian Auxiliary Attends Relief

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4450 பொதிகளில், 222500 கிலோகிராம் அரிசியும், 50 பொதிகளில் 1 கிலோ நிறையுடைய 750 பால்மா பைக்கற்றுக்களும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10900 பயனாளிகளுக்கும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 3720 பயனாளிகளுக்கும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 3380 பயனாளிகளுக்கும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 2000 பயனாளிகளுக்குமாக மொத்தமாக 20000 பயனாளிகளுக்கு இந்த நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 

மாணவிக்கு கௌரவிப்பு

கிளிநொச்சியிலிருந்து தேசிய கிரிக்கெட் குழாமிற்கு தெரிவுசெய்யப்பட்ட வீராங்கனை சதாசிவம் கலையரசியினை இந்திய துணைத்தூதுவர் பாராட்டி பரிசில் வழங்கி கெளரவித்துள்ளார்.

கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசி 19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வில் இந்திய துணைத்துாதுவர் பங்கேற்பு(Photo) | Indian Auxiliary Attends Relief

மாணவி சதாசிவம் கலையரசியை ஊக்கப்படுத்திய பாடசாலை சமூகத்தினர், பெற்றோர்,மாணவியை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினர் அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US