இலங்கைக்கு உதவத் தயாராகும் இந்தியா!
இலங்கையின் ரயில் போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்கத் தயார் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் இந்திய ரயில் துறை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை இன்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ரயில் போக்குவரத்து துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து இரு தரப்புக்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் பவித்ரா விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை புகையிரத என்ஜின் சாரதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கவும் இந்த சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.