இந்தியாவின் வலியுறுத்தலுக்கு இலங்கை செவிசாய்ப்பதாகவே தெரியவில்லை - பா அரியநேத்திரன்

India Batticaloa Sri lanka P. Ariyanethiran
By Independent Writer Jun 21, 2021 05:16 AM GMT
Report

முழு அதிகாரப் பரவலுக்கு இந்தியா, இலங்கையை வலியுறுத்தினாலும் இலங்கை இந்தியாவின் வலியுறுத்தலுக்கு செவிசாய்ப்பதாகவே தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே வாயால் வடை சுடுவதைவிட்டு விட்டு கையால் வடை சுடவேண்டும், இன்னும் சொல்வதானால் செயலில் அக்கறை காட்ட இந்தியா முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழத்தமிழர்கள் உரிமைக்கான போராட்டம் தந்தை செல்வா தலைமையில் அகிம்சை ரீதியாகவும், அதன்பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுத ரீதியாகவும் மௌனித்த பின்னரான காலத்தில் சம்மந்தன் தலைமையில் இடம்பெறும் தற்போதய இராஜதந்திர செயல்பாடும் 73 வருட காலங்களாக தொடரான அரசியலை செயல்முறைகளிலும் அயல் நாடான இந்தியாவிற்கு ஏனைய நாடுகளை விட கரிசனையும் பங்களிப்பும் அதிகளவு இருந்து கொண்டே உள்ளது.

இந்தியாவில் யார் பிரதமராக தெரிவானாலும் தமிழ்தேசிய தலைமைகள் அவர்களை நேரடியாக சந்தித்து வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வு விடயங்களை பல தடவைகள் வலியுறுத்திய வரலாறுகள் இன்று நேற்றல்ல அமரர் இந்திராகாந்தி அம்மையார் இந்திய பிரதமராக இருந்த காலம் தொடக்கம் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக உள்ள காலம் வரையும் தொடராகவே அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்குமாறு கேட்ட வரலாறுகள் உள்ளன.

அதன் அடிப்படையில்தான் அமரர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலப்பகுதியான 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு இலங்கை ஜனாதிபதியாக இருந்த அமரர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் ஆட்சியில் 13ஆவது அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் அடிப்படையில் மாகாணசபை முறை உருவாக்கப்பட்டது.

அதில் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் முதன்முதலாக 1988இல் இடம்பெற்று வடக்கு, கிழக்கு மாகாணசபை திருகோணமலையில் இயங்கியது என்பதும் அதன்பின் 2006இல் மக்கள் விடுதலை முன்ணணி உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபை இரண்டாக வடக்கிற்கு தனியாகவும் கிழக்கிற்கு தனியாகவும் பிரிக்கப்பட்டதும் 2008இல் தனியாக கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது என்பதெல்லாம் வரலாறு.

இந்திய அரசின் அழுத்தம் காலணமாக அதிகாரப்பகிர்வுக்காக கொண்டுவரப்பட்ட மாகாணசபை அதிகாரங்கள் படிப்படியாக பரிக்கப்பட்டு தற்போதைய அரசின் காலத்தில் மாகாண நிர்வாகத்தின் கீழ் இருந்த வைத்தியசாலைகள், பாடசாலைகள் என வடக்கு, கிழக்கில் இருந்த நூற்றுக்கணக்கான பாடசாலைகளும் பல வைத்தியசாலைகளும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.

மாகாண அரசின் அதிகாரத்தை திட்டமிட்டு மத்திய அரசுக்கு பறிப்பதன் மூலம் மாகாண அரசின் நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் சதியாகவே இது அமைந்துள்ளது.

இவ்வாறான விடயங்களை மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வல்லமை பொருந்திய ஒரே நாடு இந்தியா மட்டுமே என்பது யாவரும் அறிந்த விடயம். 

இதனை இந்திய அரசு செய்ய வேண்டும் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடராக வலியுறுத்தி வருவதும், அதற்கான பேச்சு வார்தைகளை இந்திய அரசின் தலைவர்கள் இந்திய தூதுவர்களுடன் இராஜதந்திரிகள் எல்லோரிடமும் பலமுறை கதைத்தும் ஆக்கபூர்வமாக எந்தப்பலனும் இதுவரை கிடைக்கவில்லை.

இறுதியாக கடந்த வாரமும் இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட சந்திப்பிலும் மீண்டும் மீண்டும் அதனையே வலுயுறுத்தி எமது தலைவர்கள் பேசியுள்ளனர்  பேசுவதை விட வேறு என்ன செய்ய முடியும்.

இதுவும் வழமை போன்று செய்திகள் பரபரப்பாய் தலைப்பு செய்திகளாக வெளிவந்தன.

இந்தியா தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அக்கறையாக இருப்பதாக பழைய வாக்கியமாகவே இதுவும் உள்ளதோ என்ற சந்தேகமே தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

ஒவ்வொரு சந்திப்பிலும் இந்திய இராஜதந்திரிகள் நம்பிக்கை ஊட்டும் விதமான கருத்துக்களை கூறினாலும் அது செய்திகளாக மட்டுமே காணப்பட்டது, செயல்வடிவில் இல்லை என்ற ஏக்கம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது என்பது உண்மை.

இருந்த போதும் தற்போதய இலங்கை அரசு இந்தியாவின் பல எதிர்புகளை மீறி சீனாவின் ஆதிக்க்த்தில் சென்று கொண்டிருக்கும் நிலையை உணர்ந்தாவது வடக்கு, கிழக்கு மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு விடயங்களைக்கு விரைந்து செயல் வடிவில் அக்கறை காட்டவேண்டும் என மேலும் கூறியுள்ளார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US