இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இலங்கையில்...!
இரண்டு நாடுகளுக்கும் இடையில் வாகன உற்பத்தித்துறையில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 18 பேர் கொண்ட குழு இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்படி, 2025 மார்ச் 17-18 ஆம் திகதிகளில் இந்த குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த பயணம் அமைந்திருந்தது.
வாகன உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள்
வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து பிரிவுகளிலும் உள்ள முன்னணி இந்திய வாகன உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, அந்தக் குழு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரை சந்தித்தது.
அத்துடன், நிதி அமைச்சகம், இலங்கை முதலீட்டு சபை மற்றும் இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் அவர்கள் சந்திப்புகளை நடத்தினர்.

மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Cineulagam
