இலங்கை அரசுக்கு இந்தியா மானியமாக வழங்கும் 20 தொடருந்து இயந்திரங்கள்
தமது அரசின் மானியமாக 22 அமெரிக்கன் லோகோமோட்டிவ் (Locomotive) கொம்பெனி டீசல் என்ஜின்களை இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு வழங்க இந்திய தொடருந்து துறை ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்படி, இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு சிறிதளவு பயன்படுத்தப்பட்ட 20 எம்10 என்ஜின் இயந்திரங்களையும், பராமரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களுக்கு பயன்படுத்துவதற்காக, மேலதிகமாக இரண்டு இயந்திரங்களையும் இந்தியா வழங்கவுள்ளது.
கோரப்படாத முன்மொழிவு
இதற்காக, இந்தியாவின் பொறியியல் ஆலோசனை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான RITES ஆல் ஐந்தாண்டு காலத்திற்கு, லோகோமோட்டிவ் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கான கோரப்படாத முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரின் சமர்ப்பிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், 22 இயந்திரங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கை அரசாங்கம் இந்த மானியத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |