மீண்டும் மீண்டும் வன்முறையில் பாகிஸ்தான்.. இந்தியா முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டு
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் சற்று முன்னர் வெளியிட்ட கருத்தில்,
"கடந்த சில மணிநேரங்களாக, இன்று மாலையில் நாங்கள் அடைந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகிறது. இது இன்று எட்டப்பட்ட தீர்மானத்தை மீறுவதாகும்.
இந்தியாவின் பதிலடி
எனவே, இந்தியாவின் ஆயுதப் படைகள் பொருத்தமான பதிலடியை அளித்து வருகின்றன" என்று மிஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த மீறல்களை நிவர்த்தி செய்வதற்கும், நிலைமையை தீவிரமாகவும் பொறுப்புடனும் கையாளுவதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்கிறது" என்று மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர்நிறுத்த மீறல்களை வலுவாகக் கையாள இந்திய இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மிஸ்ரியின் குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் இன்னும் பகிரங்கமாக பதிலளிக்காத நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இன்று இது தொடர்பில் உரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |