இலங்கையில் வசிக்கும் இந்திய பிரஜைகளுக்கான எச்சரிக்கை
இலங்கையில் வசிக்கும் தமது பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட இந்தியாவிற்கு வெளியில் தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
➡️Examine all relevant factors, including currency convertibility and the fuel situation before undertaking any essential travel to ??.
— India in Sri Lanka (@IndiainSL) August 26, 2022
➡️ General guidance to people who are there (#SriLanka), tourists who are there, or who are thinking of going.(2/2)
நாணய மாற்றம் மற்றும் எரிபொருள் நிலை
இந்திய பிரஜைகள் இலங்கைக்கு எந்தவொரு அத்தியாவசிய பயணத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர் நாணய மாற்றம் மற்றும் எரிபொருள் நிலைமை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் இருக்கும் இந்திய பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அல்லது இலங்கைக்கு செல்ல நினைப்பவர்களுக்கு பொதுவான வழிகாட்டுதல் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.