எல்லை விவகாரம்: - இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள இந்தியா

India Army China
By Murali Nov 05, 2021 08:29 PM GMT
Report
Courtesy: BBC Tamil

இந்தியா-சீனாவுக்கு இடையே நிலவி வரும் எல்லை பிரச்னைக்கு தொடர்ந்து தீர்வு காண முடியாமல் இருக்கும் நிலையில், சீனாவுடன் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது ராணுவ நடவடிக்கைகளை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளது.

சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள லடாக், அருணாச்சல பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் கட்டமைப்பு வளர்ச்சியுடன் ராணுவத்தையும் நிறுத்தி வைப்பதையும் இந்தியா அதிகப்படுத்தியுள்ளது.

இது போன்ற கட்டமைப்பை இந்தியா மேற்கொள்வது புதிதல்ல என்றாலும், இந்த திட்டங்களை நிறைவேற்ற இருக்கும் அவசரமும் வேகமும் இந்தியா மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் பார்வையில் சிக்கியுள்ளது.

அடிப்படை படைகளை பலப்படுத்துதல்

கடந்த ஆண்டு, லடாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கிடையே நடந்த மோதலில், 20 இந்தியப் படையினரும், குறைந்தபட்சம் நான்கு சீனப் படையினரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லைப் பகுதியில் இந்தியாவின் திட்டங்கள் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, எல்லைப் பகுதியில் இந்தியா சாலைகள் அமைப்பது, ரயில் பாதைகளை இணைப்பது, விமான தளங்களை அமைப்பது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ராணுவ உபகரணங்களை நவீனமாக்கும் பணியிலும் பெரும் முதலீடு செய்துள்ளது. நாட்டின் ராணுவ தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதற்கு மிகவும் அரிதான பயணமாக, ராணுவ தளபதி எம்.எம்.நரவானேவுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் மாதம் லடாக் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

மற்றொரு நிகழ்வாக, நான்கு மாதங்கள் கழித்து, இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு தளபதி, ஜெனரல் மனோஜ் பாண்டே அப்பகுதியை பார்வையிட்டார். வீரர்கள், ஆயுதங்கள், பீரங்கிப்படை மற்றும் வான்வழி உபகரணங்களை பயன்படுத்தி தாக்கும் திறன்கள் அதிகரித்துள்ளது என்று அவர் அறிவித்தார்.

"தற்செயலாக எது நடந்தாலும், அதனை சமாளிக்க நம்மிடம் ஒவ்வொரு துறையிலும் போதுமான படைகள் உள்ளன", என்று அவர் தெரிவித்தார். காலாட்படை, பீரங்கிப்படை, வான் பாதுகாப்பு, பீரங்கிப் படை வண்டிகள், கப்பற்படை ஆகிய பிரிவுகளிலும் புதிய போர் உருவாக்கங்களுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.

இந்த குழுக்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைப் பகுதிகளில் அவசர கால கட்டத்தில் வேகமாக முன்னேற உதவும். இதில் ஒரு முக்கிய கட்டடமைப்பு திட்டமாக, ஓர் முக்கிய மலைப் பாதையில், கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர்களுக்கு மேல் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய இரு வழி சுரங்கப்பாதையாகவுள்ள இந்த சுரங்கப்பாதை, சீனாவின் தடுப்புக்காவல் இல்லாமல் இந்தியா தனது படைகளை முன்னெடுத்து செல்ல உதவும் என்ற உள்நோக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.

படைகளையும் பொருட்களையும் கொண்டு செல்ல லடாக்கின் எல்லைப் பகுதியில், ராணுவம் முக்கிய சாலை கட்டுவதாக கடந்த மார்ச் மாதம் இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்த அமைச்சகத்தின்படி, இந்தியா 57 சாலைகளும், கட்டப்படும் அல்லது மறுசீரமைக்கப்படும் 32 ஹெலிப்பாட்களும், 47 புறகாவல் நிலையங்களும் அப்பகுதியில் அமைத்து வருகின்றது.

கடந்த சில மாதங்களாக, சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ள மூன்று முக்கிய பகுதிகளில், இந்தியா தனது படைகளையும் ஜெட் விமானப் படைகளையும் நகர்த்தியுள்ளது. அப்பகுதி மக்களுக்கு இது தெரிந்துள்ளது என்று ப்ளுப்பர்க் (Bloomberg) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

" ஒட்டு மொத்தமாக, தற்போது இந்தியா தோராயமாக இரண்டு லட்சம் படைகளை எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் விதம் அமைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் அதிகம்", என்று அச்செய்தி கூறுகிறது.

இதுகுறித்து, தில்லியிலுள்ள அப்சர்வர் ஆராய்ச்சி நிலையத்தில் பாதுகாப்பு, திட்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் மையத் தலைவர் ராஜேஸ்வரி பிள்ளை கூறுகையில்,

"எல்லையில் இரண்டாவது குளிர்காலத்தை எதிர்நோக்கி உள்ளோம். அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளிடம் இருந்து மேலும் அதிகமான ஆயுதங்களையும், எல்லைப்பகுதியில் இந்தியா ஏன் தனது திறன்களையும் கட்டடமைப்பையும் கவனிக்க வேண்டும் என்பதை இது விளக்குகிறது", என்று தெரிவிக்கிறார்.

ராணுவ வன்பொருளை மேம்படுத்தல்

ராணுவப்படையின் அடிப்படை தளங்களை வலிமைப்படுத்துவது மட்டுமன்றி, போர்காலத்தில், ராணுவ வன்பொருளையும் தொழில்நுட்பத்தையும் நவீனமாயமாக்குவதிலும் இந்தியாவின் கவனம் அதிகரித்துள்ளது.

கடற்படை ஆயுதங்கள், பீரங்கிவகை துப்பாக்கிகள், போக்குவரத்து ஹெலிகாப்டர்களுடன் எல்லைப் பகுதிகளில் கேமராக்கள், ரேடார்கள், உணரிகள், நகரும் கண்டறிவிகள், செயற்கைக்கோள் உருவகம் மற்றும் ட்ரோன்கள் ஆகியவையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது என்று 'தி ப்ரிட்' செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது.

"நீங்கள் எவ்வளவு தயாராக இருந்தாலும் சரி, அவை எப்போதும் போதுமானதாக இருக்காது. தொழில்நுட்பத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

இது அச்சூழ்நிலையின் முழு விவரத்தையும் எதிரிகளின் செயல்பாட்டை முன்னதாக தகவல் அறிய உதவும்", என்று 'ராணுவ நபர் கூறியதாக தி ப்ரிட்' தெரிவித்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், கண்காணிப்பையும் உளவு பார்ப்பதையும் பலப்படுத்த புதிய வான் பரப்பு படைப்பகுதியை சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்கள், ஹெலிகாப்டர்கள் (ஏ.எல்.ஹெச்), ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லாத வான்வழி விமானங்கள், முக்கியமாக, ஏ.எல்.ஹெச்சின் ஆயுத வகையான ருத்ரா ஆகிய உபகரணங்கள் உள்ளன.

அருணாச்சலப் பிரதேசத்தில், சீனாவுடன் போர் நடக்கும் பட்சத்தில், இந்த படைப்பகுதி போர் செயல்பாடுகளில் உதவும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அருணாச்சலப் பிரதேசத்தில், மற்ற நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளுடன் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராஃபீல் ஜெட் போர் விமானங்களும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

இப்பகுதியில், மற்றொரு முக்கிய ராணுவ செயல்பாடு இது. கடந்த மாதம், 5000 கி.மீ தூரம் செல்லக்கூடிய அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா. இந்திய ராணுவப் படை வியூகத்தில் இது மற்றொரு முக்கிய வெற்றியாகும்.

இது சீனாவுக்கான திட்டம் என்று இந்திய ஊடகங்களில் பரவலாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர், இந்திய ஏவுகணை தொகுப்பில் 1500 கி.மீ வரை சென்று தாக்கக்கூடிய அக்னி ப்ரைம் ஏவுகணைகள் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன.

சுகோய், மிராஜ், ஜகுவர் போர் விமானங்களின் பழைய வடிவத்தை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இது தற்போது அணு ஈர்ப்பு வெடிகுண்டுகளை வெளியேற்ற முடியும். கப்பல் தளங்களில் சமீபத்தில் சீனா கைப்பற்றி இருப்பதையும் இந்திய ஊடகங்கள் கவனத்துள்ளன.

சீனா உலகிலேயே மிகப்பெரிய கப்பல் படையை உருவாக்கி வருகிறது என்றும், இந்தியாவின் இரண்டாவது விமானத்தள கப்பல் பல்வேறு சோதனை முயற்சிக்கு ஈடுபடுத்தப்பட்டு இருந்தாலும், இந்தியாவுக்கு நீண்டகாலமாக நிலவையில் இருந்த உள் நாட்டுச்சார் வழிப்படு ஏவுகணையை அழிக்கும் (indigenous guided missile destroyer) ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் தற்போது தான் கிடைத்துள்ளது என்று 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US