கொழும்பு துறைமுக நகர முதலீடுகள் தொடர்பில் நீங்காத இந்தியாவின் அச்சம்!
புவிசார் அரசியல் பிரச்சினைகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வின்மை என்ற விடயங்களில் இந்தியா கொண்டுள்ள கரிசனை காரணமாகவே அந்த நாட்டின் வர்த்தக சமூகம் கொழும்பு போர்ட் சிட்டியில் முதலீடு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் கருதுகின்றனர்.
கொழும்பு போர்ட் சிட்டி திட்டமானது பணமோசடி மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கான மையமாக மாறலாம் மற்றும் சீனாவின் தலையீடு போன்ற போன்றவையே இந்தியாவின் கரிசனைக்கு காரணமாக அமைந்துள்ளன.
இந்திய ஊடகங்களின் செய்தி
இந்திய ஊடகங்களிலும் இவ்வாறான விடயங்கள் அண்மையில் பிரசுரிக்கப்பட்டிருத்தன.
கடந்த ஜூலை முதலாம் திகதி, இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்திலும் இந்த கரிசனைகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து இந்தியா நீண்ட காலமாக எச்சரிக்கையாக இருந்து வருகிறது என்று போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவின் பேச்சாளர் சாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
போர்ட் சிட்டி முதலீடுகள்
போர்ட் சிட்டி திட்டத்தின் கட்டமைப்பு அல்லது அதை வரையறுக்கும் சட்டம் பற்றி பலருக்கு நன்கு தெரியாது. அத்துடன் இதில் சீனாவின் ஈடுபாடு முக்கியத்துவம் பெறுகிறது. சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கொம்பெனி(CHEC) மூலம் சி.எச்.இ.சி போர்ட் சிட்டி கொழும்பு இந்த திட்டத்தில் ஒரே முதலீட்டாளராக உள்ளது. இதற்காக இலங்கை எந்த பணத்தையும் கடனாக பெறவில்லை.
சி.எச்.இ.சி போர்ட் சிட்டி நிறுவனம் தனது நோக்கங்களை பூர்த்தி செய்யத் தவறினால், இலங்கையின் மீது எந்தப் பொறுப்பும் இல்லாமல், அனைத்து சந்தை அபாயங்களையும், அந்த நிறுவனமே எடுத்துக்கொள்ளும் என்றும் சாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
போர்ட் சிட்டி முதலீடுகள் தொடர்பான விதிமுறைகள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன, இவை வங்கி மற்றும் நிதி, காப்புறுதி, முதலீட்டு உடன்படிக்கைகள், வணிகம் அமைத்தல், சமூகம் மற்றும் தொழிலாளர் விதிகள் போன்ற பலதரப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக விக்கிரமசூரிய கூறியுள்ளார்.
போர்ட் சிட்டி தொடர்பில் கவலையை வெளிப்படுத்தும் முதல் நாடு இந்தியா அல்ல, உண்மையில் அமெரிக்காவும் பணமோசடிக்கான நிலையமாக செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, தமது கவலையை வெளியிட்டிருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சி.எச்.இ.சி போர்ட் சிட்டி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த இந்திய ஊடகவியலாளர்களுக்கான ஒரு சுற்றுப்பயணத்தை, தமது ஆணையம் ஏற்பாடு செய்தது.
இதனையடுத்து, இந்திய முதலீட்டாளர்களுக்கு வணிக ரீதியாக ஆபத்து நீக்கப்படுள்ளதாக விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார். தற்போது அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் ஹொங்கொங் போன்ற நாடுகளில் இருந்து சாத்தியமான முதலீட்டாளர்கள் ஆர்வங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுவரை போர்ட் சிட்டியில் உள்ள 74 தொகுதிகளில் 6
தொகுதிகளை உள்ளூர் பிரவுன்ஸ் குழுமம் சர்வதேச முதலீட்டாளர்களுடன் சேர்ந்து
குத்தகைக்கு எடுத்துள்ளது, மேலும் இரண்டு முதலீடுகள் இங்கிலாந்து மற்றும்
அமெரிக்காவிலிருந்து இறுதி செய்யப்பட உள்ளதாக விக்கிரமசூரிய கூறியுள்ளார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
