கிழக்கு ஆளுநர் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வு
இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு வெபன் மைதானத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமானின் வருகையுடன் ஆரம்பமான நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இலங்கையில் வாழும் நான்கு தேசிய இனத்தவரின் வரவேற்பும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அளிக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்புகளும் இடம்பெற்றன.
சுதந்திர நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக இந்தியா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல்லா கலந்துகொண்டதுடன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், முப்படையினர்,பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள்,அமைச்சின் செயலாளர்கள்,சிவில் அமைப்புகள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.











