இலங்கையில் அதிகரித்து வரும் அரசியல் கூட்டணிகள்
ஜனாதிபதி தேர்தல் ஒன்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இலங்கையில் தற்போது கூட்டணிகளை அமைக்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி ஏற்கனவே ஜனாதிபதி ரணிலுடன்(Ranil Wickremesinghe) பொதுஜன பெரமுனவின் ஒரு பிரிவினர் கூட்டணி அமைத்துள்ளனர்.
இயலாத கட்டத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஏனைய பிரிவினரும் ரணிலுடன் இணைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொன்சேகா மறுப்பு
அத்துடன் சஜித் பிரேமதாசவின் கட்சியில் இருந்தும் சரத் பொன்சேகா போன்றோர் ரணிலுடன் இணைவர் என்று கூறப்படுகிறது
எனினும் அதனை சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
மறுபுறத்தில் தொழில் அதிபர் திலித் ஜயவீரவின் தலைமையில், தேசப்பற்று நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோர் இணைந்துள்ளனர்.
இந்தநிலையில் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச்சென்ற டளஸ் அழகப்பெரும தலைமையிலான உறுப்பினர்களும் முயற்சித்து வருகின்றனர்.
இது தொடர்பில் கடந்த வாரம் சுமார் 5 மணிநேர சந்திப்பு இடம்பெற்றபோதும், இந்த வாரத்திலேயயே முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டளஸ் அணியுடன் இணைந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மற்றும் திலான் பெரேரா ஆகியோர் சஜித்துடன் இணைந்துள்ள நிலையிலேயே டளஸ் தலைமையிலான அணியும், சஜித்தின் கூட்டணியில் இணையும் முனைப்புக்களை மேற்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |