மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அரசாங்க அதிபர்

Srilanka Covid Batticalo
By Kumar Jun 19, 2021 08:32 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக பிரதேச செயலக பிரிவுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீர்மானங்களை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 232 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இது மாவட்டத்தில் ஒரு நாளில் இனங்காணப்பட்டுள்ள அதிகூடிய தொற்றாளர்களாகும். தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வகையான நடைமுறைகளை பின்பற்றுவது என்பது குறித்து இன்று ஆராயப்பட்டது.


இதற்கிணங்க சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிரதேச செயலக மட்டத்தில் இரண்டு தினங்களுக்கு ஒரு தடவை பிரதேச செயலாளர்கள்,சுகாதார வைத்திய அதிகாரி,பாதுகாப்பு தரப்பினர்,ஏனைய தரப்பினர்கள் 15 பேர் அடங்கிய குழுவொன்று கூடி அந்தந்த பகுதிகளில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்து எங்களுக்கு அறியத்தருவதன் மூலம் அவற்றினை நாங்கள் தேசிய கோவிட் செயலணிக்கு அனுப்பி அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சில தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக எல்லோராலும் உணரப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மரணம் ஒன்று ஏற்பட்டால் அதன் பின்னர் எட்டு தினங்கள் வீடுகளில் ஓன்று கூடுவது வழக்கமாக இருந்து வருகின்றது.

இதன் காரணமாக பரவல் தீவிரமடைவதாக சுகாதாரப்பிரிவினரால் தெரிவிக்கப்பட்டது.இன்று தொடக்கம் ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால் மரண வீட்டில் பத்து தினங்கள் ஒன்று கூடுவது, தேவையற்ற கூட்டங்களை கூட்ட வேண்டாம் என்ற அறிவித்தல் பொதுச்சுகாதார பரிசோதகர் ஊடாக வழங்கப்படும்.அதனை மீறிச்செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மரண வீடு நடைபெற்றால் பொதுமக்கள் அங்கு ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். பெரியகல்லாறு 02 ஆம், 03 ஆம் கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட  பகுதியாக அறிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு திறக்கப்பட்டாலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதன் காரணமாக பொது இடங்களிலும் சந்தை போன்ற இடங்களிலும் ஏனைய பகுதிகளிலும் நாளாந்தம் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். சுகாதார நடைமுறைகளை மீறுதல்,ஒன்று கூடுதல் போன்றவை மேற்கொள்வோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4519 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளனர்.ஆறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US