கிளிநொச்சியில் அதிகரிக்கும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் முறைகேடாக வளங்களை அழித்தொழிக்கும் செயற்பாடுகள் மற்றும் அரச அலுவலகங்களில் இடம்பெறும் ஊழல் முறைகேடுகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என தேசிய அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று (04.09.2025) விஜயம் செய்த தென்பகுதி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளரகள் அடங்கிய குழுவினர் தேசிய அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி கிளாலி செருக்கன் முட்கொன்பன் ஆகிய பிரதேசங்களில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
கலந்து கொண்டோர்..
அத்துடன் மேற்படி மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்களையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல சேவை நிலைய அதிகாரிகளனல் மேற்கொள்ளப்படுகின்ற காணி முறைகேடுகள் மற்றும் பயிர்செய்கை உரிமம் விவசாயிகளிடம் வருடக் கணக்காக அறவிடப்பட்டு வருகின்ற நிதிகளை வெளிப்படைத் தன்மையின்றி முறைகேடாக பயன்படுத்துதல் மற்றும் கமக்கார அமைப்புக்களின் ஊழல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த களவிஜயதத்தின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி - முட்கொம்பன் முழங்காவில் கண்டாவளை பச்சிலைப்பள்ளி கரைச்சி பிரதேசங்களை சேர்ந்த தேசிய அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.




