அதிகரிக்கப்பட்ட சுற்றுலா சேவை ஜீப் கட்டணம்
யால மற்றும் புன்தல வனப் பூங்காக்களில் சுற்றுலா சேவை ஜீப் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யால சபாரி ஜீப் சங்கத்தின் தலைவர் அஜித் பிரியந்த தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் நேற்று (29.01.2024) கூறியுள்ளார்.
மேலும், கட்டணமானது 2000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணக் கட்டணம்
அதன்படி, டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் மிட்சுபிஷி கார்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 13,000 முதல் 15,000 ரூபா வரையும், ஒரு நாளைக்கு 28,000 முதல் 30,000 ரூபாய் வரை பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகேந்திரா மேக்சி மற்றும் டாடா வாகனங்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 11,000இல் இருந்து 13,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, ஒரு நாள் பயணத்திற்கான கட்டணம் 26,000 ரூபாயில் இருந்து 28,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
