குருசெத்த கடன் திட்டத்திற்கான வட்டி வீதத்தை அதிகரிக்க திட்டம்:இலங்கை ஆசிரியர் சங்கம்
குருசெத்த கடன் திட்டத்திற்கான வட்டி வீதம் 15.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று(02.01.2022) தெரிவித்துள்ளது.
மக்கள் வங்கியின் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்தபோதே, இந்த விடயத்தை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குருசெத்த கடன் 9.5 வட்டி விகிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டன. எனினும் தற்போது வட்டி உயர்வு தொடர்பான கடிதங்கள் அந்தந்த வங்கிக் கிளைகளில் இருந்து கடன் பெற்றவர்களுக்கு வந்துள்ளதாக சங்கம் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
வட்டி வீதத்தை அதிகரிக்க திட்டம்
2021 வங்கி ஆண்டு அறிக்கையின்படி,மொத்தம் 14.5 மில்லியன் பேரில் 275,500 பேருக்கு குருசெத்த கடன் வழங்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில், வட்டி விகிதங்கள் உயர்ந்தால், அது வாடிக்கையாளர்களுக்கு அதிக சுமையாக இருக்கும்.
எனவே, குருசெத்த கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வங்கி அதிகாரியிடம் வழங்கிய கடிதத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாக அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.