தம்பலகாமம் பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதான வீதியில் மாடுகள் கட்டுப்பாடின்றி நடமாடுவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், வீதி விபத்துகள் நிகழும் அபாயமும் காணப்படுகின்றது.
குறிப்பாக, வேகமாகப் பயணிக்கும் வாகனங்கள் இம்மாடுகளால் விபத்துகளைச் சந்திக்கக்கூடிய நிலை உள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
தற்போது மழை காலமாகையால் குறித்த பகுதியில் இவ்வாறான நிலமைகளை கட்டுப்படுத்துவது உரிய அதிகாரிகளின் கடமையல்லவா. எனவே, இவ்விடயம் தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை உரிய கவனம் செலுத்தி, கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் வாகனப் பயணிகளின் உயிரைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 நாட்களுக்குள் முடிவு..! சிறையிலுள்ள பௌத்த தேரர்களின் காவியுடை விவகாரத்தில் அரசின் அதிரடி வர்த்தமானி