இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
2025 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி வருவாய், 2025 ஜனவரி மாதத்தில் 1.3 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி வருவாய்
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரியில் பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட மொத்த ஏற்றுமதி வருவாய் 1,334.19 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 3.51 சதவீத அதிகரிப்பும், விவசாய ஏற்றுமதி வருவாயில் 14.87 சதவீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும், தொழில்துறை ஏற்றுமதி வருவாயில் 0.08 சதவீதமும், சேவை ஏற்றுமதி வருவாயில் 37.87 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாக சைதன்யாவின் தண்டேல் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
