சிறப்பு அங்காடிகளில் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரிப்பு
நாடு முழுவதும் உள்ள சிறப்பு அங்காடிகளில் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள சிறப்பு அங்காடிகளில் பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கும் கொள்ளையர்கள்
சிறப்பு அங்காடிகளில் பொருட்களை கொள்ளையிடும் நபர்கள் தொடர்ந்தும் பிடிப்பட்டாலும் அவர்கள், அங்காடி ஊழியர்களுக்கு கூரிய ஆயுதங்களை கொண்டு காயங்களை ஏற்படுத்துவது பிரச்சினையாக மாறியுள்ளது என கொழும்பு நகரில் உள்ள சிறப்பு அங்காடி ஒன்றின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
பொருட்களை கொள்ளையிடும் திருடர்கள் இந்த சிறப்பு அங்காடியில் பணிப்புரியும் இரண்டு பெண் ஊழியர்களை சில தினங்களுக்கு கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் கொள்ளையடிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.