கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
இலங்கையில் கோழி இறைச்சி உற்பத்தி அதிகரித்துள்ளமையால் கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் சாத்தியம் காணப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தி
இது கடந்த காலங்களில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி அளவை விட அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில், ஆண்டு முழுவதும் சராசரியாக சுமார் 220 முதல் 230 மில்லியன் கிலோ கோழி இறைச்சியே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் கோழி இறைச்சி உற்பத்தி மேலும் சாதனை படைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri