இலங்கை சுற்றுலா துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி!
கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 112, 415 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
மேலும், இதுவரையான காலப்பகுதியில், இந்தியாவிலிருந்து 19,353 பேரும், ரஷ்யாவில் இருந்து 17,225 பேரும், பிரித்தானியாவில் இருந்து 9,178 பேரும் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் 2025ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் முதல் 10 இடங்களுக்குள் இலங்கையானது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டி
பிபிசி டிராவல் (BBC Travel) இன் உலகின் தலைசிறந்த பயண இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியில் இலங்கை ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
சுற்றுலா வழிகாட்டியில், இலங்கையில் உள்ள மூடுபனி, மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள், சுற்றித் திரியும் காட்டு யானைகள், பழங்கால கோவில்கள் மற்றும் அலைச்சறுக்கு ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடாக விவரிக்கப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
