இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் மற்றுமொரு போக்குவரத்து கட்டணம்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதற்கமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் கட்டணங்கள்! வெளியானது அறிவிப்பு
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri