இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு 2024 ஜூன் மாதத்தில் 4.3% சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
குறித்த அதிகரிப்பு 5.64 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.41 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நியச்செலாவணி
அதன்படி, உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, ஜூன் மாதத்தில் 4.3% வீதமாக அதிகரித்துள்ளது.
நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா (China) வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவை சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும் எனவும், அவை பயன்பாட்டின் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்றும் இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
