யாழ்ப்பாணம் - காரைநகர் இந்துக்கல்லூரில் பொன்னகவை கட்டிட திறப்பு விழா
யாழ்ப்பாணம் - காரைநகர் இந்துக்கல்லூரில் பொன்னகவை கட்டிட திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
க.பொ.த சாதாரண பரீட்சைக்கு 1989இல் தோற்றுவித்து 50 வயதை பூர்த்தி செய்த பழைய மாணவர்களான பொன்னகவை அணியினரால் கல்லூரியில் கட்டப்பட்ட இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமே இன்று (05.02.2024) திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐந்து மாத காலப்பகுதிக்குள் 70 இலட்சம் ரூபா செலவில் இந்த வகுப்பறை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

விழாவின் அதிதிகள்
கல்லூரியின் அதிபர் அ.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்டஸ், முன்னாள் கல்லூரி அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதப்பிள்ளை உள்ளிட்ட சிலர் அதீதிகளாக கலந்து சிறப்பித்துள்ளனர்.
மேலும், பாடசாலையில் இலங்கை வங்கி மாணவர் சேமிப்புக் கிளையும் இன்று திறந்து
வைக்கப்பட்டுள்ளது.



