மட்டக்களப்பில் ஜோதிர்லிங்க அருங்காட்சியகம் திறந்து வைப்பு
இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியகம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலையில் பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் நேற்று(05.02.2024) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஜோதிர்லிங்கக் கலைக்கூடம்
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கலைக்கூடத்தின் நினைவுபடிகம் திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து சிவலிங்க தோற்றத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
@tamilwinnews இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் #Lankasrinews #Tamilwinnews #Baticaloa #Senthilthondaman #Sivan #Temple ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இதனை தொடர்ந்து இந்தியாவிலிருந்து வரலாற்று புகழ்பெற்ற 12 சிவ ஆலயங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜோதிர்லிங்கக் கலைக்கூடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி அதிதி உரைகள் இடம்பெற்று, வருகை தந்த அதிதிகளை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசும் பிரசாதமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தின் பொறுப்பாளரும் இலங்கை நிருவாக குழு உறுப்பினருமான சகோதரர் வீ.கே.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்த தேசிய ஒருங்கிணைப்பாளர் தெய்வீக சகோதரர் சார்லி ஹொஹ், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி செயலாளர் மேனகா, கிராம சேவகர், பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 17 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
