ஜானக வக்கும்புரவின் பதவியேற்பில் பேனையின் அவசியம் குறித்து ரணில் ஆலோனை : நிகழ்ந்த சுவாரஸ்யம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பேனையின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ( 22.02.2024) ஜானக வக்கும்புர சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் மற்றும் மேலதிக அமைச்சுப் பதவியைப் பெற்று கொண்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், தனது நியமனக் கடிதத்தில் கையொப்பமிட அமர்ந்திருந்த போதே தாம் பேனையைக் கொண்டுவர மறந்து விட்டதை உணர்ந்துள்ளார்.
ஜனாதிபதி ஆலாசனை
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேலதிக பேனாவை வைத்திருந்ததுடன், நியமனக் கடிதத்தில் கையொப்பமிடுமாறு இராஜாங்க அமைச்சரிடம் அதனை கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஜானக்க நியமனம் முடிந்து வெளியேறும் பொழுது ஜனாதிபதி விக்ரமசிங்க சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
குறித்த ஆலாசனையில், "குறிப்பிட்ட இரண்டு சந்தர்ப்பங்களுக்கு ஒருவர் பேனாவை எடுத்துச் செல்வதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
அதாவது, நியமனக் கடிதமொன்றில் கையெழுத்திடும் போதும், திருமணம் பதிவு செய்ய கையெழுத்து இடும் போதும் தம்வசம் பேனையை வைத்திருக்க வேண்டும்" எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |