யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென கீழே விழுந்து மரணம்
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் மத்தி பகுதியில் சிறுவன் ஒருவன் இன்று விளையாடிக்கொண்டிருந்த வேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் அவனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை திடீரென கட்டடத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுவன் மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஜெயச்சந்திரன் தஜிதரன் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
