மட்டக்களப்பில் கோர விபத்து: ஒருவர் மரணம்!
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்றைய தினம் (22.06.2023) அதிகாலை மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆலயம் ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் உயிரிழப்பு
இந்த விபத்தில் 35ஆம் கொலனி,பக்கியல்ல பகுதியைச் சேர்ந்த சச்சி என்னும் 19வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த ச.லோஜன் என்னும் 23 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்திருந்துள்ளார்.
ஏனைய நபர் படுகாயமடைந்திருந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
