ஐந்து ஆண்டுகளுக்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : அரசாங்கம் உறுதி
ஐந்து ஆண்டுகளுக்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்க வரி தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரித் தொகையை குறைக்கும் நோக்கிலான பேச்சுவார்த்தை
இந்த பிராந்திய வலயத்தில் ஒப்பீடு செய்யும் போது எமது நாட்டுக்கு குறைந்தளவு வரி விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரித் தொகையை மேலும் குறைக்கும் நோக்கிலான பேச்சுவார்த்தைகளை தொடர பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகள் 200 பக்கங்களைக்கொண்ட ஆவணம் எனவும் சிலர் இதில் தெரிவு செய்யப்பட்டவற்றை மட்டும் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



