திருகோணமலை – கொழும்பு தொடருந்து சேவை குறித்து இம்ரான் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை - கொழும்பு பகல்நேர தொடருந்து சேவையை மீள ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சரை நேரில் சந்தித்து மகஜரைக் கையளித்து இது தொடர்பாக தெளிவுபடுத்திய இம்ரான் எம்.பி. கடந்த சில வருடங்களாக பகல் 11.00 மணிக்கு திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டு வந்த கடுகதி தொடருந்து சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து சேவையை மீள ஆரம்பிக்க..
இதனால் சேவையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
தமது உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லும் ஏழை விவசாயிகளும், கொழும்புக்கு வைத்திய சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் இந்த தொடருந்து சேவையை அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர்.
இதனைவிட திருகோணமலைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளும் அதிகளவில் இந்த தொடருந்து சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த சேவை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், உல்லாசப் பிரயாணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே, தொடருந்து சேவையை மீள ஆரம்பிக்க வேண்டுமென இம்ரான் எம்.பி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இவற்றை செவிமடுத்த அமைச்சர் விரைவில் இது குறித்த தீர்மானம் ஒன்றுக்கு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ](https://cdn.ibcstack.com/article/e2e1cc8b-1a0a-4a48-9f21-b58e2287b57c/25-67a5ed0769138-sm.webp)
பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)