கடன் மீளச் செலுத்துகையைப் பிற்போட இம்ரான் எம்.பி பிரதமரிடம் கோரிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Imran Maharoof
By Mubarak Jul 04, 2022 05:42 PM GMT
Report

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடன் பெற்றவர்களும் குத்தகைக்கு வாகனம் பெற்றவர்களும் அதனை மீளச் செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, கடன் மற்றும் குத்தகை (லீசிங்) மீளச் செலுத்துகையை குறித்த காலத்திற்குப் பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் பல்வேறு அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களும் தனிப்பட்ட வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வங்கிகளில் கடன் பெற்று அதனை மீளச் செலுத்தி வருகின்றனர்.

இதேபோல வாகனங்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்தோர்களும் தவணை அடிப்படையில் அதனை மீளச் செலுத்தி வருகின்றனர்.

உயர்ந்துள்ள வாழ்க்கைச் செலவு

கடன் மீளச் செலுத்துகையைப் பிற்போட இம்ரான் எம்.பி பிரதமரிடம் கோரிக்கை | Imran Mp Request To Prime Minister

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களினதும் விலை அதிகரித்து மக்களின் வாழ்க்கைச்செலவு மிக அதிகளவில் உயர்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் தமது நாளாந்த வாழ்வாதாரச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குக் கூட மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல வாகனங்களைப் பயன்படுத்தி தொழில் செய்வோர் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக நாட்கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்கி இருக்கின்றனர்.

இதனால் இவர்கள் வாகனங்களைத் தொழிலுக்குப் பயன்படுத்தி வருமானம் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலைமைகளை தாங்களும் அறிவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

நாட்டு மக்கள் தமது அன்றாட உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்யப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் இந்நிலையில் கடன் மற்றும் குத்தகைகளை மீளச் செலுத்துவதில் இதனோடு தொடர்புபட்டவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு கடன் மற்றும் லீசிங் மீளச் செலுத்துகைகளை குறித்த காலத்திற்குப் பிற்போட ஏற்பாடு செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது விடயத்தில் தங்கள் அதிகபட்சம் கவனம் செலுத்துவதைப் பெரிதும் வரவேற்கிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US