யாழ்ப்பாணத்திற்கு உள்ள ஆபத்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து வட மாகாணத்திற்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மக்களை எச்சரித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கோவிட் தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் நாங்கள் செய்த நுளம்புகள் சம்பந்தமான பூச்சியியல் ஆய்விலே டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளும் குடம்பிகளும் அதிகமாக காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளது.
டிசம்பர் 6 முதலான ஒரு வார காலப்பகுதி யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
கோவிட் - 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மூன்றாவது தடவையாக கோவிட் - 19 தடுப்பூசியானது இவ்வாரம் முதல் வழங்கப்பட உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் கோவிட் தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்துக்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்குறிப்பிட்ட நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் கோவிட் - 19 தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் அத்தடுப்பூசியைப் பெற்ற நாளிலிருந்து ஆகக் குறைந்து ஒரு மாத இடைவெளியின் பின் மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளலாம்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.
நோய் நிலைமையால் அல்லது அதற்கு பெற்றுக் கொண்ட சிகிச்சையினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயுடையவர்கள், உறுப்பு மாற்று (உதாரணமாக சிறுநீரகம், ஈரல், சுவாசப்பை) மற்றும் என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், புற்றுநோயுடையவர்கள் மற்றும் புற்றுநோய்க்கு தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள், மண்ணீரல் தொழிற்பாடு குறைந்தவர்கள் அல்லது நோய் நிலையின் நிமித்தம் மண்ணீரல் அகற்றப்பட்டவர்கள், வைத்தியரால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களென பரிந்துரைக்கப்பட்டவர்கள் என 20 வயதிற்கு மேற்குறிப்பிட்ட நோய்நிலைமை உடையவர்கள் மூன்றாவது தடவை மேலதிக தடுப்பூசி பெற்றுக் கொள்ள முன்னுரிமை உடையவர்கள் ஆவர்.
எனவே, மேற்குறிப்பிட்ட தேவையுடையவர்கள் ஏற்கனவே தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை மற்றும் மருத்துவ அறிக்கையுடன் தமக்கு அருகிலுள்ள குறிப்பிடப்பட்ட வைத்தியசாலைகளில் இந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பாக்கியலட்சுமியில் ராதிகாவிற்கு தெரியவரும் கோபி பற்றிய உண்மை- யார் சொன்னது தெரியுமா, பரபரப்பான புரொமோ Cineulagam

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan

வெளிநாட்டில் வாழ்க்கையை தொலைத்து நின்ற நபர் கைக்கு வந்த பல கோடி பணம்! புலம்பெயர்ந்த நண்பனால் அடித்த அதிர்ஷ்டம் News Lankasri

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

சிஎஸ்கே-வை துவம்சம் செய்த அஸ்வின்! மார்பில் குத்தி கொண்டு தோனி படையை வெறுப்பேற்றி கொண்டாடிய வீடியோ News Lankasri

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022