இலங்கையில் குழந்தையற்ற தம்பதியினருக்கு முக்கிய அறிவித்தல்
நாட்டில் அரச வைத்தியசாலையொன்றில் முதன்முறையாக, உடலுக்கு வெளியே கருக்கட்டல் (IVF - In Vitro Fertilization) சேவையை ஆரம்பிக்க கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை தயாராகி வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார்.
IVF செயல்முறை இந்தச் செயல்முறையின் கீழ், தாயிடமிருந்து பெறப்பட்ட முட்டையும், தந்தையிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவும் ஆய்வகத்தில் ஒன்றிணைக்கப்பட்டு, கரு வளர்க்கப்பட்டு, பின்னர் தாயின் கருப்பையில் செலுத்தப்பட உள்ளது.
தற்போது இந்த பெறுமதிமிக்க சேவையை எதிர்பார்த்து சுமார் 1,725 தம்பதியினர் காத்திருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.
நாட்டின் எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் இந்தத் தொழில்நுட்பம் இல்லாத நிலையில், தனியார் துறையில் இந்தச் சிகிச்சையைப் பெற சுமார் இருபது முதல் முப்பது இலட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையான உபகரணங்கள் மற்றும் ஆய்வக அமைப்புகள்
இறுதி கட்டத்தில் பணிகள் இந்தத் திட்டம் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், தேவையான உபகரணங்கள் மற்றும் ஆய்வக அமைப்புகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் கூறினார்.
இருப்பினும், கட்டடத்தின் சிறிய கட்டுமான தாமதம் காரணமாகவே இந்த பணிகள் இதுவரை தாமதமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தலையீட்டின் மூலம் இந்த பெறுமதிமிக்க திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை ஆரம்பிக்க கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை தயாராகி வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார்.
IVF செயல்முறை இந்தச் செயல்முறையின் கீழ், தாயிடமிருந்து பெறப்பட்ட முட்டையும், தந்தையிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவும் ஆய்வகத்தில் ஒன்றிணைக்கப்பட்டு, கரு வளர்க்கப்பட்டு, பின்னர் தாயின் கருப்பையில் செலுத்தப்பட உள்ளது.
20 முதல் 30 இலட்சம் செலவு சேமிப்பு தற்போது இந்த பெறுமதிமிக்க சேவையை எதிர்பார்த்து சுமார் 1,725 தம்பதியினர் காத்திருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் தலையீட்டின் மூலம் இந்த பெறுமதிமிக்க திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
