க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரங்களில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள்
கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகாத நிலையில், பரீட்சைகள் நிறைவடைந்து ஆறுமாதங்கள் அளவில் கடந்து விட்டது.
இந்நிலையில் உயர்தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அறிவிப்பு
பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்ட இந்தத் தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு இன்று அறிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளுக்கும் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 42 நிமிடங்கள் முன்
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam