படுகொலை வழக்கில் சிக்கிய ஹசீனா! முடக்கப்பட்ட கடவுச்சீட்டு
பங்களாதேஸின் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை 97 பேரின் கடவுச்சீட்டுக்களை இரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், மற்றும் கொலைகளில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டே இவ்வாறு கடவுச்சீட்டுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
குறிப்பாக இந்த பட்டியலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும்(Sheikh Hasina) உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹசீனா உட்பட 75 பேர்
இவர்களில் 22 பேர் கட்டாயமாக காணாமல் போன சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் ஹசீனா உட்பட 75 பேர் கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வருடம் ஜனவரி 06ஆம் திகதி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 11 அந்நாட்டின் 11 பிரஜைகள் மீது கைது உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இவர்களில் ஷேக் ஹசீனா, அவரது முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் (ஓய்வு) மேஜர் ஜெனரல் தாரிக் அகமது சித்திக் மற்றும் முன்னாள் காவல் ஆய்வாளர் பெனாசிர் அகமது ஆகியோர் அடங்குதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிடியாணைகள் அவாமி லீக் அரசாங்கத்தின்(என்பது வங்காள தேசத்தின் ஒரு சமயச்சார்பற்ற முன்னணி அரசியல் கட்சி) 15 ஆண்டுகால ஆட்சியின் போது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் கட்டாயமாக காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |