சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளினால் ஏறக்குறைய 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதாந்தம் 300, 000 பேர் வரையில் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்திய பின்னர் இவ்வாறு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாரதிகளின் புள்ளிகள் குறைப்படும்.
மொத்தமான 24 புள்ளிகள் சாரதி அனுமதி பத்திரத்தில் வழங்கப்படும் நிலையில் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றால் 10 புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
