அரச ஊழியர்களை குறைந்த நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைப்பது தொடர்பில் கவனம்
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், பொதுச் செலவினங்களைக் குறைப்பதற்காக அரச ஊழியர்களை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் சேவைக்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான அமைச்சரவைப்பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெளியிடப்படவுள்ள சுற்றறிக்கை
அதனை தொடர்ந்து இது தொடர்பாக அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கையொன்று வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் எரிபொருள், மின்சாரம் மற்றும் தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசிய பராமரிப்பு செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இதன்மூலம் செலவீனங்களை குறைக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.