ஹைட்டியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
ஹைட்டியில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹைட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் வீதிகளில் ஆயுதமேந்திய கும்பல் வன்முறையில் ஈடுபடுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து வெளிவிவகார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹைட்டியில் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுடன் வெளிவிவகார அமைச்சு தொடர்பில் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதியின்மை
இந்த நிலையில் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அமைதியின்மை நிலவும் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் வசிப்பதாக அந்த நிறுவனங்கள் உறுதி செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கியூபாவிலுள்ள இலங்கைத் தூதரகம், இது தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |