இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது வெப்பநிலை வேகமாக அதிகரித்துள்ளமையினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வெப்பம்
மேலும் தற்போது நிலவும் வெப்பம் காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பத்தின் அளவு, அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வெப்பநிலை அதிகரித்து காணப்படும் போது, அதிகளவான நீரை பருகுமாறும், வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்குமாறும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
