சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
மோசமான வானிலை காரணமாக அழிக்கப்பட்ட அல்லது தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தின் நகலைப் பெற முடியும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கமைய, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் சென்று நகல்களைப் பெற முடியும் என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பேரிடர் காரணமாக அழிக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் தனது பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்ய வேண்டும் என ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
சேதமடைந்த வாகனத்தின் எதிர்கால சட்ட நடவடிக்கைகளை இது எளிதாக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
