இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜூன் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வரி திருத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் செயற்கை நிறம் கொண்ட அல்லது நிறமற்ற வெள்ளை சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த 3 ரூபாய் செஸ் வாி 5 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாி அதிகரிப்பு
மேலும், 50 கிலோ கிராம் மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் ஏனைய போர்ட்லேண்ட் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்படும் 5 ரூபாய் செஸ் வாி 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 50 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட பொதிகளில் மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் ஏனைய போர்ட்லேண்ட் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்காக அறவிடப்படும் 3 ரூபாய் வாி 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam