தேங்காய் இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை
மறு ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் பால்மாவு மற்றும் குளிர்ந்த தேங்காய் சொட்டுகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளரும், கைத்தொழில் அமைச்சின் செயலாளரும் இதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளனர்.
தேங்காய் இறக்குமதி
அதன்படி, குறித்த குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் தேங்காய் இறக்குமதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, தென்னை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை சாகுபடி திணைக்களம், தென்னை மேம்பாட்டு அதிகாரசபை மற்றும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI) ஆகிய நிறுவனங்கள் இணைந்து அண்மையில் கைத்தொழில் அமைச்சில் ஒரு கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri