தற்போதைய ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு! மீண்டும் முடங்குமா நாடு
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினால் கோவிட் தொற்று குறைவடையவில்லை. மாறாக நடுத்தர மக்களே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய நாட்டை முழுமையாக முடக்காமல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவது பயனற்றது. ஒரு வாரகாலமாவது அறிவியல்பூர்வமாக நாட்டை முடக்கியிருந்தால் சிறந்த பெறுபேற்றை பெற்றிருக்க முடியும்.
அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கோவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
வைரஸ் போன்ற அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செயற்படுத்தப்படும் போது மக்கள் வீதியில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்படும்.
அத்துடன் ஒருவருக்கொருவரான தொடர்பு தடை செய்யப்படும். அத்துடன் நாட்டை முழுமையாக முடக்கி கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறான வழிமுறைகளுக்கு அமையவே பெரும்பாலான நாடுகள் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தி சாதகமான பயனை பெற்றுக் கொண்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam